நாகை: வாலிபர் அடித்துக் கொலை; 2 பேர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி இவர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டல் எதிரில் உள்ள பெட்டிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவைச் சேர்ந்த முகேஷ்குமார், ரவிச்சந்திரன். இவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். 

இவர்கள் நேற்று நள்ளிரவு பணி முடித்துவிட்டு முகேஷ்குமாரின் இரண்டு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூண்டி காரை நகர் சென்றனர். அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் வேளாங்கண்ணி சென்றனர். பிரதாபராமபுரம் நான்கு சாலை சந்திப்பில் வந்தபோது இவர்களின் இரண்டு சக்கர வாகனத்தில் பாலாஜியின் இரண்டு சக்கர வாகனம் மோதிக்கொண்டது. இதில் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் முகேஷ்குமார், ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேரும் கோபமடைந்து பாலாஜியை அருகில் கிடந்த செங்கல், கல்லை எடுத்து அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ்குமார், ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி