நாகப்பட்டினம்: திருச்சி மத்திய மண்டல ஐஜி ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. க. ஜோஷி நிர்மல் குமார் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். அதன்பின்பு வேதாரணியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 100 கிலோ கஞ்சா மற்றும் 121 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்த முயன்ற குற்றவாளிகளை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயப் பாட்டில்கள் கடத்த முயன்ற 17 குற்றவாளிகளை விரைந்து கைது செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். அப்போது நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. A. K. அருண் கபிலன் உடனிருந்தார்கள்.

தொடர்புடைய செய்தி