வேதாரண்யம்: பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா வாசிகளுக்கு ஏமாற்றம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் உள்ள ராம்சார் சைட் பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை வெளி மாநில மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வரும். இந்த ஆண்டு செப்டம்பரிலேயே பறவைகள் வரத்து அதிகரித்து, தற்போது சீசன் உச்சத்தில் லட்சக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. தற்போது பறவைகள் பார்வையாளர்கள் பார்க்கும் இடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டன. இதன் காரணமாக, வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பறவைகளைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி