நாகை: பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

நாகை அருகே அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சுதா (38) என்பவர், இடப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்ட கதிரவன் (52), அவரது மனைவி ஷீலா (48), மகள் காவியபிரியா (21) ஆகியோரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஷீலா வீட்டு வாசலில் சுதாவின் மாடு சாணம் போட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சுதாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸார் ஷீலா, காவியபிரியா, கதிரவன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி