நாகப்பட்டினம் மாவட்டம் புத்தகரம் ஊராட்சி கீழ சன்நல்லூர் ஜீவா நகர் பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பு ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தும் சாலை சீரமைக்கப்படாத நிலையில், திடீர் மழையால் தற்போது சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.