வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருத்தேரோட்ட விழா

கோடியக்காடு குழகர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் என்கிற அமிர்தகடேஸ்வரர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. வள்ளி, தேவசேனா சமேத அமிர்தகடேஸ்வரர் சுப்பிரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தேரின் ஒருபக்க வடத்தை ஆண்களும், மற்றொரு பக்க வடத்தை பெண்களும் இழுத்தனர். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக திருத்தேர் கீழ வீதியை அடைந்தது. இத்திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி