வேதாரண்யம் அருகே வினோத திருவிழா

வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ஊராட்சியில் உள்ள மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழங்களை பிடித்து சாப்பிட குழந்தை பாக்கியம் உண்டாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதும் நம்பிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி