நாகப்பட்டினம் மாவட்டத்தில் 01-01-2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு, 04-12-2025 வரை திரும்பப் பெறப்படுகிறது. நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம் தொகுதிகளில் சிறப்பு உதவி முகாம்கள் 15-11-2025 மற்றும் 16-11-2025 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.