கோடியக்கரையில் மீன்பிடிக்கச் சென்ற அன்புசெல்வம் விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு மீன்வளத்துறை சார்பில் ரூ.2 லட்சத்திற்கான காசோலை அவரது சகோதரர் நவலிங்கத்திடம் நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா, உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி ஆகியோர் வழங்கினர். இந்த நிவாரண உதவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.