தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. சரணாலயத்திற்குள் செல்லும் சாலையில் ஒரு அடி உயரத்திற்கு மேல் நீர் தேங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்திற்குள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.