நாகை: திமுக இளைஞரணி சார்பில் பொதுக் கூட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து வேதாரண்யத்தில் திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என ஒன்றிய அரசை கண்டித்து வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அண்ணா அரங்கில் இன்று மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.கே. வேதரத்தினம், என்.வி. காமராஜ், கழக இளம்பேச்சாளர் அகிலா, ஊடகவியலாளர் ராஜ்கம்பீரன் அப்பாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பேசினர். 

இக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் உதயம்வே முருகையன், என்.சதாசிவம், மகாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, பொதுக்குழு உறுப்பினர் எல்.எஸ்.இ பழனியப்பன், உமா செந்தாமரைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் நன்றி உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி