வேதாரண்யத்தில் நாளை மின்தடை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உட்கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செப்.26) நடைபெற உள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் வேதாரண்யம் நகரம், அகத்தியன் பள்ளி, கோடியக்காடு, கோடியக்கரை, ராமர் பாதம், தோப்புத்துறை, ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், தேத்தாகுடி, செம்போடை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் செய்யப்படாது என மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி