நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன், மத்திய அரசின் ஜல் ஜீவன் அம்ருத் திட்டம் இன்னும் முழுமையடையவில்லை என்றும், ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் சாலையில் கிடப்பதாகவும் தெரிவித்தார். முழுமையடையாத திட்டத்தை தமிழக முதல்வர் திறந்து வைப்பது தவறு என்று குறிப்பிட்ட அவர் சோதனை ஓட்டம் நடத்தப்படாமலும், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படாமலும் விளம்பரத்திற்காக திறக்கக் கூடாது என்றும் கூறினார்.