நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செம்போடை பிரதான கடைவீதியில் சாலையோரம் நடந்து சென்ற நாகக்குடியான் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் அருணாச்சலம் (75) மீது வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், வினோத் இருவரும் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுதாகர், வினோத் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யம் போலீசார் விசாரிக்கின்றனர்.