நாகை: மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

நாகை வாய்மேடு காவல் எல்லைக்குள்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மாற்றுத்திறனாளி பெண், வெள்ளிக்கிழமை பெற்றோா் வேலைக்கு சென்றிருந்தபோது, மதுபோதையில் இருந்த சுரேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தொடர்புடைய செய்தி