வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதால், நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் வரும் 24 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.