சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மழைக்காலத்தில் பரவும் நோய்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் அறிவுறுத்தலின் பேரிலும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குமார் தலைமையிலும் நடைபெற்ற முழுத் தூய்மைப் பணியை திருமருகல் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தன், அபினேஷ், நவீன், விஜயகுமாரி, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து பணிகளை மேற்பார்வையிட்டனர்.
Motivational Quotes Tamil