நாகை: புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரூ. 17.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ரூ. 12.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவு தானிய சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா தேத்தாகுடி வடக்கு, கல்லூளிகாடு, கத்திரிப்புலம், செட்டிப்புலம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி