நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குய்யா மணி சிறப்புரையாற்றினார். விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக பாதிக்கப்பட்ட 2,163 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்க திராவிட மாடல் அரசு முயற்சி எடுத்தது. இதன் முதல் கட்டமாக 60 பேருக்கு ரூ. 3 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் மினி டைட்டில் பூங்கா அமைக்க முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளார். இது நாகை மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் என அமைச்சர் தெரிவித்தார்.