வேதாரண்யம்: முருகப்பெருமான் வீதி உலா வந்து தீர்த்தவாரி

கோடியக்காடு அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலய வைகாசி விசாகத் திருவிழாவில் முருகப்பெருமான் வீதி உலா வந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலய வைகாசி விசாக திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா நடந்தது. 

இன்று ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சன்னதியில் உள்ள அமிர்த புஷ்கரணியில் தீர்த்த வாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி