கீழையூர்: வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். காமேஸ்வரம் கடற்கரையில் ரூ. 4 கோடியில் நீலக்கொடி கடற்கரைத் திட்டம், மீனவர் காலனிகளில் ரூ.2.70 கோடியில் வீடுகளைப் பழுதுபார்க்கும் பணி, நுன்னீர் பாசனத் திட்டம், விதைப்பண்ணைத் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு, காமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கற்றல் ஆய்வு மையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி