வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், திமுக ஆட்சியில் ரூ.1000 உரிமைத் தொகை வட மாநிலத்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், நிதி மேலாண்மை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், மதுரை மாநகராட்சி ஊழல் குறித்த ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாய கடன் தள்ளுபடிக்கு RBI இம்முறை கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.