நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 30,217.34 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், 06.11.2025 வரை 29,380 ஹெக்டரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 837.34 ஹெக்டரில் அறுவடை மற்றும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரீப் 2025-2026 குறுவை பருவத்தில் திறக்கப்பட்ட 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 03.09.2025 முதல் 06.11.2025 வரை 1,13,453 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (06.11.2025) ஒரே நாளில் 2,687 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவரை 96,785 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.