நாகை: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் சாலை மறியல்

வேதாரண்யம் அருகே இரண்டாவது புதிய டாஸ்மார்க் கடையை திறக்க எதிர்ப்பு- முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சாலை மறியல்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தார்சாலை என்னும் இடத்தில் அரசு டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த கடையில் இருந்து வெள்ளப்பள்ளம் கிராமத்தில் சுமார் 600 மீட்டர் தூரத்தில் மற்றொரு புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்து மதுபான பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கடை திறக்க ஏற்பாடு நடைபெற்றது.இரண்டாவது டாஸ்மார்க் கடை திறப்பதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ். மணியன் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை சாலையில் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மார்க் அதிகாரிகள் இது தொடர்பாக விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அதுவரை கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி