நாகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களுக்கான கோரிக்கை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் கலந்துகொண்டு, மீனவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மீனவர் நல வாரிய உறுப்பினர் அக்கரைபேட்டை மனோகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.