நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கிராமங்களில் அதிவேக சூறைக்காற்றால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மீனவர்கள் இன்று ஆறாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரைகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.