தஞ்சாவூர் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலையில் வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற நாடக விழாவை வருவாய் கோட்டாட்சியர் திருமால் தொடங்கி வைத்தார். வேதாரண்யம் தமிழ் பண்பாட்டு கலைஞர்கள் வழங்கிய விடியலை தேடி என்னும் நாடகமும் நாகப்பட்டினம் வானவில் பள்ளி குழந்தைகள் வழங்கிய பல்லி என்ற நாடகமும் இடம் பெற்றது. இதில் சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்புகளுக்கு மனிதர்களே காரணம் என்பதை விளக்கும் விதமாக நாடகக் கலைஞர்கள் நடிப்பின் மூலம் விளக்கினர். இந்த நாடக விழாவில் ஏராளமானோர் நாடகத்தை கண்டு களித்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி