நாகை மாவட்டம், வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் மூலம் உணவு உப்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக நடப்பாண்டு தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் தப்பிய தொடர் மழையால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மார்ச் மாதத்தில் தொடர்மழை, ஏப்ரல் மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் முழுவதும் உப்பு உற்பத்தி தொடர் மழையால் தடைபட்டது. தற்போது ஜூன் மாதத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை மராமத்து பணிகள் மேற்கொண்டு உப்பு உற்பத்தி துவங்கிய உப்பு உற்பத்தியாளர்களுக்கு தற்சமயம் மீண்டும் பெய்து வரும் தொடர்மழையால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.