வேதாரண்யம்: தென்னம் புலம் மழை மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தென்னம்புலம் மழை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக மழை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலித்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மழை மாரியம்மன் திருத்தேரில் அமர்ந்து முக்கிய வீதிகள் வழியே ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வடங்களை பிடித்து இழுத்த நிலையில் திரு தேரோட்டம் நடைபெற்றது. வழி நெடுகிலும் பெண்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். அனைவருக்கும் அருசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி