நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு *குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல்* சார்ந்து ஒரு நாள் பயிற்சி காளியம்மன் சன்னதி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் திரு. இளங்கோவன் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு. வ. முருகன் தலைமையேற்றார். இப்பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து மாணவர்கள் எப்படி தங்களை காத்துக்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் திரு. சி. பிரபு, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை திருமதி. ரேகா, அன்னை சத்யா அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை திருமதி. சசிகலா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் சி. பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.