நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர், பஞ்சநதி குளம் மேற்கு, தாணிக்கோட்டகம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு தகட்டூர் தாரா திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.