தேச பாதுகாப்பு, பாதுகாப்பான கடற்கரையையும் உருவாக்க கடலோர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. சைக்கிள் விழிப்புணர்வு பேரணியினர் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சர்தார் வேதரத்தினம், வைரப்பன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர். 6553 கிலோமீட்டர் தொலைவு நடைபெறும் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வரும் மார்ச் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரி சிவகுமார் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்