நாகை- இலங்கையிடையே ஜனவரியில் சரக்கு கப்பல்

நாகையில் இருந்து இலங்கைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியது: நாகை மற்றும் அண்டை டெல்டா மாவட்டங்களில் வர்த்தகத்தை புதுப்பிக்கும் முயற்சியில், நாகை மாவட்ட நிர்வாகம் ஜனவரி கடைசி வாரத்தில் நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே சிறிய சரக்கு சேவையை தொடங்க உள்ளது. 

இதில், மளிகைப் பொருள்கள், ஆடைகள் மற்றும் விவசாயப் பொருள்களை கொண்டு செல்ல முடியும். முதல்கட்டமாக, வாரத்திற்கு ஒருமுறை ஜனவரி இறுதி வாரம் முதல் போக்குவரத்து சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில், போக்குவரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சோழர் காலத்தில் இருந்தே நாகையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதற்கு வரலாறு உண்டு. நாகை துறைமுகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு கூட, செயல்பட்டிருந்தது. 

துறைமுகத்தின் வர்த்தக திறனைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளது. திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளும், திருச்சி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு நிறுவனங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளன.

தொடர்புடைய செய்தி