வேதாரண்யம்: முனீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் (VIDEO)

வேதாரண்யம் அருள்மிகு கட்சுவான் முனீஸ்வரர் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் கீழ வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு கட்சுவான் முனீஸ்வரர் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று ஜூன் 16ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. 

முன்னதாக யாக சாலை பூஜைகள் நிறைவுற்று புனித நீர் கடங்களை சுமந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையை வலம் வந்து விமான கலசங்களுக்கும், முனீஸ்வரர், விநாயகர் பூர்ணாம்பிகை, புஷ்கலாம்பிகை உடனுறை அய்யனார் முத்துவீரன் ஆகிய தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி