நாகை: விபத்தில் குழந்தைகள், ஆசிரியை பலி.. 16-ம் ஆண்டு நினைவுதினம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தில் 2009 டிசம்பர் 3 அன்று பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து 9 குழந்தைகள், ஒரு ஆசிரியை உயிரிழந்தனர். இன்று 16-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாகக்குடையான் கிராமத்தில் உள்ள பள்ளி நினைவுத் தூணுக்கு இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியையின் பெற்றோர், மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கிராம மக்களும் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி