நாகை: வீசப்பட்ட தலையில்லாத ஆண் சடலம்; மேலும் ஒருவர் கைது

திருவக்கரை கல்குவாரியில் வீசப்பட்ட தலையில்லாத ஆண் சடலத்தை வானூர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். திருவெண்ணைநல்லூர் அடுத்த சரவணப்பாக்கத்தை சேர்ந்த ராஜதுரை வயது(32) என்பவரை முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது. உடலை கல்குவாரியில் வீசியது தெரியவந்தது. 

இவ்வழக்கில் 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவான சரவணப்பாக்கத்தை சேர்ந்த தங்கபாண்டி, வளவனூர் டி.எஸ்., நகரை சேர்ந்த சரவணன் மகன் புருஷோத்தமன் வயது25) ஆகிய 2 பேரை தேடி வந்தனர். விழுப்புரத்தில் பதுங்கியிருந்த புருஷோத்தமனை போலீசார் நேற்று கைது செய்தனர். தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி