இதில் கவியழகன் பலத்த காயமடைந்தார். இடிபாடுகளில் சிக்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் அவரது தந்தை மற்றும் தங்கை சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கவியழகன் செம்பியன் மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்