மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெண்கள் முக்காடு அணிந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ஊதிய பாக்கியை வழங்க கோரியும், 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைக்க கூடாது என வலியுறுத்தியும் பெண்கள் முக்காடு அணிந்தவாறு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.