சீர்காழி: பெண் குண்டர் சட்டத்தில் கைது

சீர்காழி அருகே புதுப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்ப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜகுமாரி (60) என்பவர், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டபோது பிப். 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ராஜகுமாரி குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி