தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு சீர்காழி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி வரதராஜன் மற்றும் அக்கட்சியினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து சீர்காழி அருகே திருக்குறளையூர் கிராமத்தில் உள்ள உக்கிரன் நரசிம்ம கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.