இருவரும் தினமும் கல்லூரிக்கு ஒன்றாக செல்வது வழக்கம். இதுபோல வியாழக்கிழமை காலை கல்லூரிக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.கல்லூரி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த புவனேஷ் சீா்காழி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.விபத்து குறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து , லாரி ஓட்டுநரான கொள்ளிடம் அருகேயுள்ள ஆனந்த கூத்தன் கிராமத்தைச் சோ்ந்த கந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.