மயிலாடுதுறை: திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆச்சாள்புரத்தில் ஸ்ரீ சிவலோக தியாகேசர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ தோத்திர பூர்ணாம்பிகை சமேத திருஞானசம்பந்த சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மணமேடையில் எழுந்தருளி மாலை மாற்றுதல் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் ஒலித்திட திருக்கல்யாணம் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி