மயிலாடுதுறை அடுத்த திரு இந்தளூரில் வைணவ திவ்ய தேசங்களில் 22வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பங்குனி உற்சவ பெருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஊஞ்சல் உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. பெருமாள் தாயாருடன் சர்வ அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.