மயிலாடுதுறை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றிய உட்பட்ட காளகஸ்திநாதபுரம் கடைவீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டிப்பதாகவும், ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறு கோரியும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகி சிங்காரவேலன் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.