1911-இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறை சென்றார். இறுதி வாழ்க்கையில் பிரம்மச்சரியம் மேற்கொண்டு வந்த இவர் கடந்த 1978 மார்ச் 6 ஆம் தேதி மறைந்தார். சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட நீலகண்ட பிரம்மச்சாரியின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த வீட்டில் நினைவு இல்லம் அமைத்து அங்கு அவர் சிலை திறப்பு விழா தமிழ்நாடு பிராமணர் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் ஆர். ரமணன் தலைமையில் நடைபெற்றது. பாரதி தமிழ் சங்க தலைவர் வைஜெயந்தி ராஜன் விழா பேருரை நிகழ்த்தினார்.
மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம் பொறுப்பாளர் முனைவர் நாக செங்கமல தாயார், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில செயலாளர் செம்பியூரான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எருக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நீலகண்ட பிரம்மச்சாரியாரின் பெயரை சூட்டிட அரசை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.