ஏனங்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

நாகை மாவட்டம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் தலைமையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் பங்கேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, காதொலி கருவி, தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி