சீர்காழி தென்பாதி திருப்புரசுந்தரி நகரைச் சேர்ந்த ஐடி ஊழியர் நடராஜன் (43) மற்றும் அவரது மனைவி மாலினி ஆகியோர் மே 22-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். திங்கட்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் வைத்திருந்த சுமார் ஆறரை பவுன் தங்க வைர நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.