சீர்காழி நகராட்சி தியாகராஜன் நகரில் தோப்பு பெரப்படி வாய்க்கால் அமைந்துள்ளது. நகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கக்கூடிய இந்த வாய்க்காலானது, தற்போது கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் பிளாஸ்டிக் குப்பைகள், செடி, கொடிகள் படர்ந்து தண்ணீர் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டுள்ளது. எனவே சீர்காழி நகராட்சி நிர்வாகம் விரைந்து இந்த வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.