சீர்காழி: கடையடைப்பு போராட்டம் வாபஸ்

சீா்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவிலில் கரோனாவைக் காரணம் காட்டி அதற்கு முன்பு நின்று சென்ற ரயில்கள் தற்போது நிறுத்தப்படுவதில்லை. மேற்படி இரண்டு ரயில் நிலையங்களிலும் முன்புபோல் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 

இந்தநிலையில், வைத்தீஸ்வரன்கோவில் வர்த்தகர் சங்கத்தின் தலைவரும், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தின் பொதுச் செயலருமான கண்ணன் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, வைத்தீஸ்வரன்கோவிலில் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்தார். 

இதையடுத்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், ஜூலை மாத இறுதிக்குள் வைத்தீஸ்வரன்கோவிலில் உழவன் விரைவு ரயிலுக்கு நிறுத்தமும், சீர்காழியில் அந்தியோதயா ரயிலுக்கு நிறுத்தமும் செய்யப்படும், ரயில் பயணிகளின் பிற கோரிக்கைகள் படிப்படியாக அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி