மயிலாடுதுறை: சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு கருப்புக்கொடி கையில் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி